நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு

Best Teacher Award -விழுப்புரத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் விருது பெற்ற நல்லாசிரியர்களுக்கு பாராட்டி மரியாதை செய்யப்பட்டது;

Update: 2022-09-16 02:30 GMT

Best Teacher Award -விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா விழுப்புரம் ஜெயசக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இவ்விழாவை விழுப்புரம் மாவட்ட நல்லாசிரியர் விருதாளர்களின் ஒருங்கிணைந்த கல்வி குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். முனைவர்.பாபு செல்வதுரை தலைமையேற்று நடத்தினார்,

விழாவில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை.இரவிக்குமார் கலந்துக்கொண்டு அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி, நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

இவ்விழாவில் கடந்த 2009 முதல் இந்த ஆண்டு வரை விருது பெற்ற 32 நபர்கள் பாராட்டப்பட்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதாளர் ஒருங்கிணைந்த கல்வி வழிகாட்டுக் குழு துவக்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருகிறது, இந்த குழு ஆசிரியர்கள் மத்தியில் மிகவும் பாராட்டுக்குறியதாகவும், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News