விழுப்புரம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு விருது- கலெக்டர் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்ன மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்/;
விழுப்புரம் மாவட்டத்தில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2021-2022-ஆம் அண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் திருநங்கைகள் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதியன்று திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்ககைகளை சிறப்பிக்கும் வகையில் 2021-2022-ஆம் அண்டுக்கான "சிறந்த திருநங்கைக்கான விருது" தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1,00,000/-க்கான(ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்விருது பெற தகுதிகளாக, அரசாங்கத்தின உதவி பெறமால் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது என தெரிவிக்கப்படுகிறது.
தகுதியான நபர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வருகின்ற 17.02.2022 முதல் 28.02.2022 வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் (Upload) செய்யப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருது பெறத்தகுதியுள்ளவர் இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அதில் தெரிவித்துள்ளார்.