தாமதமாக திறக்கப்படும் சித்த மருத்துவமனை: காத்துக்கிடக்கும் நோயாளிகள்

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனையை காலையில் திறப்பது காலதாமதம் ஏற்படுவதால், சிகிச்சைக்கு வந்தவர்கள் காத்திருக்கின்றனர்;

Update: 2021-12-15 12:24 GMT

விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவமனை

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை காலை 7.30 மணியிலிருந்து 12 மணி வரை என வெளியே உள்ள தகவல் பலகையில் தகவல் உள்ளது,

ஆனால் இன்று சுமார் 9 மணி வரை மருத்துவமனையை திறக்க யாரும் வரவில்லை, அதனால் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள் பலர் காத்து கிடந்தனர், இதே நிலைமை தான் தினந்தோறும் தொடருவதாக அங்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News