விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களை சி.இ.ஓ. கிருஷ்ண பிரியா பாராட்டினார்.

Update: 2022-09-08 10:45 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ண பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் செல்லையா, செ.கொத்தமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் தண்டபாணி, கஞ்சனூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஜெயராணி, விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் ராஜசேகரன், சித்தலிங்கமடம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஜனசக்தி, கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் ஆரோக்கியராஜ், பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் தமிழழகன், ராஜம்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கரநாராயணன், திண்டிவனம் மான்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் அமல்ராஜ், விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் பெருமாள் ஆகியோா் மாநில நல்லாசிரியா் விருது பெற்றனா்.இவா்களுக்கான பாராட்டு விழா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, விருது பெற்ற 10 ஆசிரியா்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டினாா்.

விழாவில் மாவட்டக் கல்வி அலுவலா் காளிதாஸ், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் செந்தில்குமாா், பெருமாள், அலுவலகக் கண்காணிப்பாளா்கள் கோகுலகண்ணன், வெங்கடேச பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News