விழுப்புரத்தில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றனர். அபபோது கூடுதல் ஆட்சியர், ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன், தொழிலாளர் உதவி ஆணையர் ஆர்.ஜெய்சங்கர் தொழிலாளர் துணை ஆய்வாளர் தனசேகர் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.