விழுப்புரம் மாவட்ட தடயவியல் உதவி இயக்குநருக்கு அண்ணா பதக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் தடயவியல் உதவி இயக்குநருக்கு அண்ணா பதக்கம் கிடைத்துள்ளது.;
விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் தே.சண்முகத்திற்கு தடய அறிவியல் துறையில் கடந்த 34 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்தமைக்காக,இந்த ஆண்டு அண்ணா பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசு ரூ.20,000/- (ரூபாய் இருபதாயிரம் மட்டும்), முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வுயரிய விருது பெற்றதற்கு இவரது சொந்த கிராமமான செஞ்சி வட்டம், நல்லான்பிள்ளைபெற்றாள் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு மாவட்டத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது