விழுப்புரம் அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதி விபத்து

விழுப்புரம் அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

Update: 2022-08-08 11:58 GMT

விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் (பைல் படம்).

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரிசிலோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அது விழுப்புரம் அய்யூர் அகரம் மேம்பாலம் அருகே வந்த போது லாரியின் பின்னால் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற  ஆம்னி பேருந்து மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன் பகுதி முழுவதும் சேதமானது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் வட்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலத்த படுகாயங்களுடன் கிடந்த டிரைவர் முனுசாமி மற்றும் காயமடைந்த 4 பயணிகளையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்தினால் அரை மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவலர்கள் லாரி மற்றும் ஆம்னி பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் இது குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக ஆம்னி பேருந்தில் இருந்த சகபயணிகள் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News