சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
POCSO Act Punishment- விழுப்புரத்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;
POCSO Act Punishment- விழுப்புரம் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி அங்குள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி அங்குள்ள வீதியில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த 75 வயது முதியவரான மணி என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குளிக்க வைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி அழுது கொண்டே வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனே இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2