விழுப்புரத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
Adoption of the Anti-Elder Abuse Pledge in Viluppuram;
விழுப்புரத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்க்கப்பட்டது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் உறுதிமொழி எடுத்தனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (15.06.2022) புதன்கிழமை முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு குறித்த உறுதிமொழி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மகளிர் ஆணைய உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம், ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.