அதிமுக இனி ஆட்சிக்கு வரவே வாய்ப்பில்லை சிபிஎம் மாநில செயலாளர் ஆரூடம்
அதிமுக இனி ஆட்சிக்கு வரவே வாய்ப்பில்லை என விழுப்புரத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 23-வது மாநாடு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாளாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது கூறுகையில்,
கனமழை காரணமாக தமிழகத்தில் பெரும் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு குழுவும் வந்து பார்த்து விட்டு சென்றுள்ளது ஆனால் தற்போது வரை மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை, இது வருத்தமான செயலாகும்.தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, ஒரு மாநிலத்தில் பேரிடர் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுகிறது என்றால் அதற்கு முழு பொறுப்பும் மத்திய அரசுதான் ஏற்க வேண்டும் ஆனால் தற்போது வரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை இது மேலும் மேலும் தமிழகத்தை பழிவாங்கும் செயலாகும்,உடனடியாக மத்திய அரசு தமிழக அரசு கேட்ட நிதியை வழங்க வேண்டும்,
கடந்த இரண்டு தினங்களாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களின் கோரிக்கையை அரசு செவிசாய்க்க வேண்டும்,பெரிய பெரிய முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு சிறு குறு தொழில் செய்பவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,அவர்கள் கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
ஸ்ரீபெரும்புத்தூர் போராட்டத்தின்போது போராட்டம் முடியும் தருவாயில் அமைதியாக முடிந்த நிலையில் பெண்கள் மீது செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி தடியடி நடத்தியது கண்டிக்கதக்கது, முதல்வர் தலையிட்டுஅந்த எஸ்பி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சிஐடியு சங்க தொழிலாளர்கள், மற்றும் பெண்கள் 22 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை விடுவித்து,அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் எதிர்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பதவி இழந்த அதிருப்தியில் இது மாதிரி பேசி வருகிறார். தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிப்பட்ட காரணங்களுக்காக சில கொலைகள் நடக்கின்றன. இதனை சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறிவிட முடியாது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாகவே உள்ளது. எதிர்க்கட்சி என்றால் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் கூறுவது வழக்கம் தான்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவது போல மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்று அவர் எப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை. அதிமுக இனி ஆட்சிக்கு வரவே வாய்ப்பில்லை, பள்ளியில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பது மனித சமூகத்தின் தலைகுனிவு, அதனை தடுக்க சமூகத்தின் அனைவரும் குரல் கொடுக்கவேண்டும், இது மாதிரி செயல்களை சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கிறது என கூறினார்,
அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.