அதிமுக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்: எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
விழுப்புரத்தில் நடந்த அதிமுக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்;
விழுப்புரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,
கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தலில் கடுமையாக பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என்றார். எம்எல்ஏக்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ச்சணன், தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு உட்பட பலர் உடனிருந்தனா்.