விழுப்புரம் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகள் தீர்வு

விழுப்புரம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்ததில் 2 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

Update: 2022-06-28 02:45 GMT

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பூரணி அம்மாள் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன இழப்பு, காசோலை வழக்கு, குடும்ப வழக்கு உள்ளிட்ட 2 ஆயிரம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு, அதில் ரூ. 12 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டதலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் சார்ந்த நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News