விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 9 மணி வரை 13.88 சதவீத வாக்குபதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவில் 9 மணி வரை 13.88 சதவீத வாக்குபதிவு நடைபெற்றுள்ளது.;
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9 மணி அளவில் வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 14.70 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 14.48 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 14.63 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 12.02 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 14.61 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 12.81 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த வாக்குபதிவு 13.88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.