விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, இணை இயக்குநர் (சுகாதாரநலப்பணிகள்) மரு.சண்முகக்கனி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் திட்ட அலுவலர் லலிதா மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.