விழுப்புரத்தில் அமைச்சர் வீடு அருகே மரம் விழுந்து மின் கம்பிகள் அறுந்தன
விழுப்புரம் நகரத்தில் இரவு சூராவளி காற்றுடன் பெய்த கனமழையால் அமைச்சர் வீடு அருகே மரம் விழுந்து மின் கம்பிகள் அறுந்தன.;
விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடிரென பரவலாக நள்ளிரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, இதில் விழுப்புரத்தில் சண்முகா புரம் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டின் அருகே மரம் முறிந்து சாலை ஓரத்தில் சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தது,இதில் மின் கம்பிகள் அறுந்து தொங்கியது, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.