விழுப்புரம் ஆட்சியரிடம் பாஜகவினர் மனு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமித்ஷா வருகையையொட்டி பாதுகாப்பு வழங்க பாஜகவினர் மனு.;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி கலிவரதன் சார்பில் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் வருகின்ற 28 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழுப்புரம் வருகை தருவதை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் கொடிகள், பேனர்கள் மற்றும் ஒலி, ஒளி அமைக்க அனுமதி தருமாறும் மற்றும் அவருக்கு தக்க பாதுகாப்பு வழங்குமாறும் மனு அளித்தனர். இதில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.