விழுப்புரம்: அனைத்துக் கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில், நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.;
கொரோனா நோய் தொற்று காரணமாக 1050 வாக்குகளுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகளில் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 2368 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 411 வாக்குச்சாவடிகளில் ஆயிரத்து 50க்கும் மேல், வாக்காளர்கள் உள்ளதால் இவற்றைப் பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்துவதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் 14 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார். இதில் திமுக அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.