விழுப்புரத்தில் மாவட்டஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங் ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு ஊசி தமிழக அரசு சார்பில் கடந்த மாதத்திலிருந்து போடப்பட்டு வருகிறது. விழுப்புரம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையம், ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இதில் முதல் கட்டமாக செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.இதனை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங் ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.