நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி மைல்கல் ராதாகிருஷ்ணன்

Update: 2021-01-15 05:15 GMT

இந்தியாவில் 2.9 கோடி மக்களுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது . எனவே தடுப்பூசியை கண்டு ஏமாற்றமடைய வேண்டாம் எனவும் தடுப்பூசி நோய் பரவாமல் தடுக்க ஒரு மைல்கல் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறும் போது, தமிழகத்தில் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் அவைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என ஜனவரி 25ஆம் தேதி வரை பதிவு செய்தவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்றார் .

இந்தியாவில் 2.9 கோடி மக்களுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு தான் வருகிறது . தடுப்பூசி நோய் பரவாமல் தடுக்க ஒரு மைல்கல் என்றார். ஆய்வின் போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News