விழுப்புரத்தில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் ஏவி சரவணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இதனை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து கோஷமிட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.