விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டம்: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கல்

Meeting in Tamil -விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டத்தில் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது.

Update: 2022-08-27 03:00 GMT

பைல் படம்.

Meeting in Tamilவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல்சலாம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அண்ணாதுரை, துணைத் தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12-வது வார்டுக்குட்பட்ட கீழ்மாட வீதி, இந்துக்கள் சுடுகாட்டில் மினி பவர்பம்ப் அமைக்க அனுமதி அளிப்பது, 7-வது வார்டுக்குட்பட்ட பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மண் பாதையை சாலையாக மாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்துக்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சார்பாக ரூ.15 ஆயிரம் வழங்கினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News