ஒரத்தூரில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட ஒரத்தூரில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் கடைப்பிடித்தனர்.;

Update: 2021-12-26 15:15 GMT

வெண்மணி தியாகிகளின் 53 வது நினைவு தினத்தை வி.தொ.ச சார்பில் விக்கிரவாண்டி ஒன்றியம் ஒரத்தூர் கிளையில் விதொச கொடியேற்றி நினைவுநாள் கூட்டம் நடைபெற்றது,

கூட்டத்திற்கு விதொச மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பிரேமா தலைமை தாங்கினார், கிளைத் தலைவர் கே.இராதாகிருஷ்ணன் கொடியேற்றினார்,

இதில் விதொச ஒன்றிய செயலாளர் பி.கலியமூர்த்தி வெண்மணி தியாகிகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.அமுதா,கிளை செயலாளர் பி.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News