விக்கிரவாண்டி பகுதியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் தடுப்பூசி முகாம்

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்தில் ராதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைந்து தடுப்பூசி முகாம் நடத்தினர்;

Update: 2021-06-26 13:05 GMT

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்தில் ராதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைந்து தடுப்பூசி முகாம் நடத்தினர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பனையபுரம் கிராமத்தில் மாதா கோயில் வளாகத்தில் சமூக நல அறக்கட்டளை மற்றும் ராதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் காலை முதலே பனையபுரம், பனபாக்கம், தொரவி, மண்டபம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் திரளாக வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

அவர்களுக்கு சமூக நல அறக்கட்டளையினர் டீ, பிஸ்கட் கொடுத்தனர், மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கி அனுப்பி வைத்தனர், மேலும் இப்பகுதியில் மக்களின் தடுப்பூசி பயத்தை போக்க தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்களை மக்களின் வீடு தேடி சென்று வழங்கி விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இதுவரை 11முகாம்களை ஒருங்கிணைத்து நடத்தி உள்ளனர்,5000 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் இலக்கை நோக்கிய இந்த பணியில், பாதர் பெலிக்ஸ் தலைமையிலான நெல்சன், சிவா,கவி உள்ளிட்ட 20 பேர் கொண்ட சமூக நல அறக்கட்டளை குழுவினர், சுகாதார துறை மற்றும் மருத்துவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News