அதிசய இரண்டு தலை கன்றுகுட்டி:ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்
விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் இரு தலையுடன் பிறந்த கன்றுகுட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்;
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட மேல்காரணை கிராமத்தில் வசிப்பவர் பொன்னுசாமி மகன் அய்யனார், இவருக்கு சொந்தமாக ஒரு பசு மாடு உள்ளது.
இன்று இரு தலையுடன் கூடிய ஒரு கன்று குட்டியை ஈன்று உள்ளது. இந்த செய்தி அப்பகுதியில் காட்டு தீ போல் பரவியதும், அப்பகுதி மக்கள் வந்து அந்த இரு தலை கன்று குட்டியை ஆச்சரியமாக பார்த்து கும்பிட்டு செல்லுகின்றனர்,
மேலும் அந்த கன்று குட்டிக்கு பொட்டு வைத்து, பூமாலை போட்டு அலங்கரித்துள்ளனர்,