நதியில் நீர்வரத்து அதிகரிப்பு: போக்குவரத்துக்கு தடை
விக்கிரவாண்டி அருகே உள்ள வராக நதியில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது;
வராக நதி பாலத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே செல்லும் வராக நதியில் பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால், நாளுக்கு நாள் நதியில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது,
இந்நிலையில் பாதுகாப்பு கருதி தொரவி கிராமத்தில் இருந்து வராக நதியை கடந்து விக்கிரவாண்டி வரை செல்லும் சாலையை இன்று ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் சாலையின் குறுக்கே மர தடுப்புகளை வைத்து போக்குவரத்தை தடை செய்தனர். டுத்தனர்,
அப்போது கிராம நிர்வாக அலுவலர் ஜெனிபர், ஊராட்சி எழுத்தர் பாஸ்கர், கிராம உதவியாளர் மகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனா்.