பள்ளி மாணவர்கள் ஜேஆர்சி சார்பில் நல்லொழுக்க உறுதி மொழி
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி திறந்ததை அடுத்து மாணவர்கள் ஜேஆர்சி சார்பில் நல்லொழுக்க உறுதி எடுத்துக் கொண்டனர்.
இதற்கான நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முட்டத்தூர் .ஒய்க்காப் மேனிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஓய். ஜாக்குலின் ஆசநாத் தலைமை தாங்கினார்,
பள்ளியில் மாணவர்களுக்கான நல்லொழுக்கம் சார்ந்த வகுப்பு நடத்தப்பட்டது. இதில் உதவி தலைமையாசிரியர் டி. ஜேக்கப் ஜீவானந்தம் நடைமுறை வாழ்க்கையில் நல்லொழுக்கம் குறித்து உரையாற்றினார்.
இந்நிலையில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியரும், விழுப்புரம் கல்வி மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்டக் கன்வீனர் முனைவர் ம பாபு செல்வதுரை வாழ்விடம், பள்ளி, சமுதாயத்தில் நல்லொழுக்கம் குறித்து கருத்துரையாற்றினார்.
ஜே.ஆர்.சி சார்பில் பதிவிட்ட நல்லொழுக்க நெறிமுறைகளை மாணவர்கள் அனைவரும் உறுதிமொழியாக எடுத்துக் கொண்டனர். அப்போது உடற் கல்வி ஆசிரியர் ஆர். செல்வக்குமார், வரலாறு பட்டதாரி ஆசிரியர் டி. பிரேம்ராஜ்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.