தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் எஸ்.பி ஆய்வு

விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா இன்று ஆய்வு செய்தார்.

Update: 2021-07-21 11:17 GMT

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து பகுதியை ஆய்வு செய்யும் விழுப்பும் எஸ்.பி.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா இன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். விக்கிரவாண்டி நகரில் அடிக்கடி விபத்து ஏற்படும் வடக்கு பைபாஸ் பகுதியையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது விபத்தை தடுக்கும் பொருட்டு, சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டு வைக்க உத்தரவிட்டார். இதனால் வேகமாக வந்த வாகனங்கள் வேகத்தை குறைத்து மெதுவாக சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News