ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஜே ஆர் சி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது;
விழுப்புரம் மாவட்ட ஜே.ஆர்.சி சார்பில் ஆசிரியர் பயிற்சி மையத்தில் மரக்கன்று நடுதல்,வழங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. எண்ணாயிரம், அரசு மேனிலைப்பள்ளியில் 1 முதல் 10 வகுப்பு வரையிலாக ஆசிரியர்களுக்கு சிஆர்சி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் முட்டத்தூர். ஒய்க்காப் மேனிலைப் பள்ளி, நேமூர், ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, திருநந்திபுரம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எண்ணாயிரம், அரசு மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.
பயிற்சியின் நிறைவில் ஜே.ஆர்.சி மாவட்டக் கன்வீனர் முனைவர். ம பாபு செல்வதுரை தலைமையில் நிழல்தரும் மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. அத்துடன் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புனித பேட்ரிக் மெட்ரிக், பள்ளி ஜே.ஆர்.சி ஆலோசகர் பி. லூயிஸ், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.லீனஸ் பிளமிங் ஜோஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.