விக்கிரவாண்டி பகுதியில் அதிகாலையில் மழை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென அதிகாலையில் மழை பெய்து வருகிறது;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, ஒருவித புழுக்கமான சூழல் நிலவி வந்தது.
இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் இருந்து இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருவது மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.