ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: ஆந்திர வாலிபர் கைது
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர்
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஒரு பாரத வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது, இங்கு இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் யாரோ ஒரு மர்ம நபர் பணம் எடுக்க சென்று நீண்ட நேரமாக வெளியில் வராமல் இருப்பதை கண்ட அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
இதனையடுத்து விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர், முதற்கட்டமாக அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் தீவிர விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர்.