தாயை கிண்டல் செய்தவருக்கு கத்தி குத்து

Police Investigation - விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தாயை கிண்டல் செய்தவரை தட்டி கேட்டு கத்தியால் குத்திய வரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-05 02:15 GMT

பைல் படம்.

Police Investigation -விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுவள்ளி குப்பத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42). இவரது கணவர் இறந்துவிட்டார். மகேஷ் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை அதே ஊர் காலனி பகுதியை சேர்ந்த கலியுகன் (32) என்பவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மகேஷ் தனது மகன் பாண்டு என்கிற மோகன்தாசிடம் (23) கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் கலியுகனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கலியுகன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாசை தேடி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News