விழுப்புரம் அருகே மர்மமான முறையில் சாமியார் சாவு
விழுப்புரம் அருகே உள்ள காணை பகுதியில் ஒரு சாமியார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்திலுள்ள விநாயகர் கோவில் அருகில் அடையாளம் தெரியாத சாமியார் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காணை காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.