அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகத்துக்கு திமுக எம்எல்ஏ பதிலடி
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் திமுக மீது அதிக அளவில் குற்றச்சாட்டு எழுப்பி வருவதற்கு திமுக எம்எல்ஏ புகழேந்தி பதிலடி;
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தஅதிமுக ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், திமுகவை கடுமையாக சாடினார். விழுப்புரத்தின் வளர்ச்சிக்கு திமுக எதுவும் செய்யவில்லை என்றும் தற்போது பதவியில் உள்ள அமைச்சர், மாவட்ட செயலாளர் குறித்தும் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவுமான புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக ஆட்சிக்காலத்தில் தான் பல்வேறுதிட்டங்கள் கொண்டுவரப்பட்டு விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, 1989ம் ஆண்டில் விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெற்று, அமைச்சராக இருந்த பொன்முடி, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் பலதிட்டங்களை கேட்டுபெற்று விழுப்புரத்திற்கு கொண்டுவந்தார். அதேபோல், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராக இருந்த மு.க ஸ்டாலினடமும், மாநகரங்களுக்கு இணையான திட்டங்களை பெற்று விழுப்புரம் மாவட்டத்தின், நகரத்திற்கும் வளர்ச்சிக்கு வித்திட்டது திமுகஆட்சிதான்.
தமிழகத்தின் வேறு எந்தமாவட்டங்களிலும் இல்லாத வகையில் ஒரே இடத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலகங்களும் உள்ளடக்கிய பெருந்திட்டவளாகம், புதியபேருந்தநிலையம், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை, புதுச்சேரிக்கு செல்லும் நிலையை மாற்றி, முண்டியம்பாக்கத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டிஅரசுமருத்துவமனை, அண்ணாபல்லைக்கழக அரசு பொறியியல் கல்லூரிகள், அரசுக்கல்லூரியில் முதுகலைப்பட்டபடிப்பு, அரசு பாலிடெக்னிக் கல்லூரி இப்படி கல்வி, சுகாதாரத்தில் வேறு எந்தமாவட்டமும் குறுகியகாலத்தில் வளர்ச்சியடைந்ததில்லை.
அதேபோல், விழுப்புரம் நகரில்குடிநீர் பிரச்சனையை தீர்க்க எல்லீஸ் சத்திரம், பில்லூரிலிருந்து குடிநீர்கொண்டுவரும்திட்டத்தால், இன்றளவும் நகரத்தில் குடிநீர்பிரச்சனை ஏற்படவில்லை. மாநகரங்களைப்போல், முதலில் நகரப்பகுதிக்கு விழுப்புரத்திற்கு பாதாளசாக்கடை திட்டத்தைகொண்டுவந்தது திமுகதான். சிமெண்டசாலைத்திட்டம், கல்வியில்பின்தங்கிய மாவட்டத்தின்நிலையை மாற்ற நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலையாகவும், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் மாற்றியது திமுக அரசுதான்.
விழுப்புரம் அரசுப்போக்குவரத்துக்கழகம் என கொண்டுவரப்பட்டு உலகளவில் இந்த பெயரை அறியச்செய்ததும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்ததும் திமுகஆட்சியில்தான். இப்படி ஒவ்வொருதுறைகளிலும் சரித்தர சாதனை திட்டங்களை கொண்டுவந்தது திமுக ஆட்சியில்தான் என்பதை மாவட்ட மக்கள்அறிவார்கள். இதனை, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகமும் அறிவார்.
ஏதோ அரசியலுக்காக வாய்க்குவந்தபடி பேசுவதைநிறுத்திக்கொள்ளவேண்டும். திமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சியடைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் இவ்வாறு பேசிவருகிறார் என பதிலடிகொடுத்துள்ளார்.
சொந்தஊர் பிரச்சனையையே பலஆண்டுகளாக தீர்க்கமுடியவில்லை.
சி.வி சண்முகத்தின் சொந்த ஊரான, திண்டிவனத்தில் பேருந்து நிலையம்வசதிக்காக பலஆண்டுகளாக மக்கள் தவித்து வருகிறார்கள். 10 ஆண்டுகாலம், அமைச்சராக இருந்த சி.வி சண்முகம் அங்கு ஒரு பேருந்துநிலையத்தை கொண்டுவர முடியவில்லை. இதனை, திண்டிவனம் தொகுதி மக்களும் நன்கு அறிவார்கள். போகாத ஊரக்கு வழி தேடுவதைப்போல், இதைசெய்தேன், அதைசெய்தேன் என்று கூறிவருகிறார். முதலில், சொந்த ஊர்பிரச்சனையை தீர்க்கவில்லை என்பதை உணரவேண்டும். தற்போது, திமுக ஆட்சியில் அந்த கோரிக்கையையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார் என தெரிவித்துள்ளார்.