ஏரி மதகில் தவறி விழுந்து இறந்தவருக்கு அமைச்சர் பொன்முடி நேரில் அஞ்சலி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ஏரி மதகில் தவறி விழுந்து இறந்தவருக்கு அமைச்சர் பொன்முடி நேரில் அஞ்சலி செலுத்தினர்.;
உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட வி.சாலை ஊராட்சியினை சேர்ந்த ராமதாஸ் மகன் அருண். இவர் அப்பகுதியிலுள்ள சிறிய ஏரி வழியாக நடந்து சென்ற போது ஏரி மதகு மீது தவறி விழுந்து உயிரிழந்தார்.
அவருடைய உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட ஆட்சியர் த.மோகன்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் உடனிருந்தனா்.