விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு 100 படுக்கைகள் தயார்
விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளை தாக்கும் கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க 100 படுக்கைகள் தயார் என பொன்முடி தெரிவித்தார்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் பொன்முடி திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார், அப்போது கொரோனா பரவல் மற்றும் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், குழந்தைகளை தாக்கும் மூன்றாவது கொரோனா அலையை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது. அதற்காகவே முன் எச்சரிக்கையாக இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார், அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் புகழேந்தி லட்சுமணன் உட்பட பலர் உடனிருந்தனா்.