விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் பொன்முடி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-10-07 13:57 GMT

விழுப்புரம் மாவட்டம் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6 ந்தேதி விக்கிரவாண்டி, கண்டமங்கலம், வானூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர்,முகையூர், செஞ்சி உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில், வருகின்ற 9 ந்தேதி மேல்மலையனூர், காணை,மயிலம், மரக்காணம் கோலியனூர், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது,

இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது, இந்நிலையில் காணை ஒன்றியம், கல்பட்டு ஊராட்சியில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திமுக வேட்பாளர்கள் என்.கலைச்செல்வி,கே.சிவக்குமார் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கல்பட்டு ஊராட்சியில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,

இந்த நிகழ்ச்சியில்  தெற்கு ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா மற்றும் திமுக, கூட்டணி கட்சினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News