விழுப்புரம் அருகே சின்னத்திரை இயக்குனர் கார் விபத்தில் படுகாயம்

விழுப்புரம் அருகே சின்னத்திரை இயக்குனர் கார் விபத்தில் படுகாயமடைந்தார்.

Update: 2022-03-01 11:55 GMT
விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

விழுப்புரம் அருகே சின்னத்திரை இயக்குனர் கார் விபத்தில் படுகாயம்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 67). சின்னத்திரை இயக்குனர். இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உறவினர் ஆவார். மனோஜ்குமார் தனது காரில் மனைவி செல்வி (வயது 56), உதவியாளர் ரகுபதி (49) ஆகியோருடன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை மனோஜ்குமார் ஓட்டினார்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தனியார் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மனோஜ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில்  தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு.அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News