பள்ளியில் முக்கிய உதவி எண்கள் பெயர் பலகை திறப்பு
விக்கிரவாண்டி அருகே முட்டத்தூர் ஒய்காப் பள்ளியில் முக்கிய உதவி எண்கள் பெயர் பலகை ஜே.ஆர்.சி சார்பில் திறக்கப்பட்டது.;
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முட்டத்தூர், ஒய்க்காப் மேனிலைப்பள்ளியில் ஜே.ஆர்.சி சார்பில் மாவட்ட கன்வீனர் முனைவர்.ம.பாபுசெல்வதுரை ஏற்பாட்டில் தமிழ்நாடு அரசின் மாணவர்களுக்கான முக்கிய உதவி எண் அடங்கிய பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது,
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை திருமதி. ஜாக்குலின் ஆஸ்நாத், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் முனைவர். தியாகு குமார் கலந்து கொண்டு பெயர் பலகைைய திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.