ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் பழங்குடி இருளர் குடும்பத்திற்கு உதவி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் 50 பழங்குடி இருளர் குடும்பத்திற்கு ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் உதவி வழங்கினர்.
விழுப்புரம் ஜே.ஆர்.சி ஆசிரியர்கள் சார்பில் 50 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கி, அங்கு உள்ள குழந்தைகளுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடாடினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது, இந்நிலையில் மழைக்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் இணை சார் அமைப்பான விழுப்புரம் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பை சார்ந்த ஆசிரியர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து மாவட்ட கன்வீனர் முனைவர் பாபு செல்வதுரை தலைமையில் மட்டப்பாறை, செ.குன்னத்தூர், காரை ஆகிய மூன்று கிராமங்களிலுள்ள 50 இருளர் குடும்பங்களுக்கு அரசி, பிரட் பாக்கெட், போர்வை, துணிகள் ஆகியவற்றை வழங்கினர்.
இந்த நிகழ்வில், ஜே.ஆர்.சி நிர்வாகிகள் கல்லப்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் எஸ்.இரவீந்திரன், அகரம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஏ. எட்வின், காங்கேயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பி. மரிய ஜோசப், மாம்பழப்பட்டு அரசு மேனிலைப்பள்ளி ஆசிரியர் ஏ.தன்ராஜ், எம்.ஆர் ஐ.சி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் எல். அல்போன்ஸ். வாணியம்பாளையம் ஆனந்தா நடுநிலைப்பள்ளி ஆசிரியை எஸ். சரசு, ஆனாங்கூர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஆர். மாலினி தேவி ஆகியோர் இணைந்து வழங்கினர்
மேலும் இயற்கைபேரிடர் காலங்களில், எப்படி நம்மையும், உடமைகளையும், பாதுகாத்துககொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு கருத்துக்களை மாவட்ட கன்வீனர் முனைவர் மா.பாபுசெல்லதுரை எடுத்துக் கூறினார். தொடர்ந்து அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.