விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற பணம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே காரில் ஆவணமின்றி எடுத்து சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-09 15:52 GMT

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர்

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சி தேர்தல்களில் பரிசு மற்றும் பணம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கபட்டு, சோதனை நடத்தி வருகின்றனர்,

இந்நிலையில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் மாதவன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆம்ஸ்டிராங் மற்றும் போலீசார் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னை நோக்கிச் சென்ற காரை சோதனை செய்தபோது, அதில், உரிய ஆவணங்களின்றி 97ஆயிரம் ரூபாய் எடுத்துச் செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம், சுந்தரிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம்,எனவும் சென்னையில் நடைபெறும் காண்ட்ராக்ட் பணிக்கு பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலையில் உதவி தேர்தல் அலுவலர் இருதயராஜிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News