விவசாய சட்டம் ரத்து: விவசாயிகள் கொண்டாட்டம்
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நேமூரில் விவசாய சட்டம் ரத்தை வரவேற்று விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நேமூரில் விவசாய சங்கத்தினர்,விவசாய சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். கலியமூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து, விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்,
வட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன், செல்வம் அருண்குமார்,பாலமுருகன் பஞ்சாட்சரம், ரத்தினவேல் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.