அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்டம், பனமலைபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விக்கிரவாண்டி பனமலைப்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நுகர்வோர் கண்காணிப்பு குழு சார்பாக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.
பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அனைவரும் மரம் வளர்க்க வேண்டும். என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் மாணவிகள் மற்றும் அசேன் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.