மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வெளியேற்ற திருட்டு மின்சாரம் எடுக்கும் குத்தகைதாரர்
விக்கிரவாண்டி அருகே உள்ள பாசனத்திற்கான பொது ஏரியை மீன் குத்தகைக்கு விட்டதால், நீரை வெளியேற்ற மின்சார திருட்டு நடக்கிறது
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சாமியாடிகுச்சிபாளையம், பாப்பனபட்டு, சாத்தனூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய ஏரி நீர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு பயன்பட்டு வருகின்றன.
இந்த ஏரியில் மீன் குத்தகை விட்டதால், ஏரியில் பாதி அளவு தண்ணீர் இருக்கும் போதே, குத்தகை எடுத்தவர் மீன் பிடிக்க வேண்டி மின்கம்பங்களில் கொக்கி போட்டு திருட்டு மின்சாரம் எடுத்து ஏரி தண்ணீரை வெளியேறி வருகிறார்,
இதனால் ஏரி நீர் ஆதாரத்தை நம்பி இரண்டாம் போகம் பயிர் செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை,
அதனால் அக்கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மிக பெரிய எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.