சேதமான மின் கம்பம், இப்ப விழுமோ? எப்ப விழுமோ?: அச்சத்துடன் மக்கள்
விழுப்புரம் அருகே காணை குப்பம் குடியிருப்பு பகுதியில் ஒரு மின் கம்பம் கட்டுமான கம்பிகள் தெரியும் நிலையில் பலவீனமாக இருக்கிறது;
உள்ளே இருக்கும் கட்டுமான கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் பலவீனமாக உள்ள மின் கம்பம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியம், குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகரில், வீடுகளுக்கு அருகே உள்ள சிமென்ட் மின் கம்பம் மூன்று மாத காலமாக பழுதடைந்த நிலையில், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகிறது. மேலும் உள்ளே இருக்கும் கட்டுமான கம்பிகள் தெரியும் நிலையில் பலவீனமாக மின் கம்பம் இருக்கிறது.
மின் கம்பத்தின் அடிப்பகுதி எப்பொழுது வேண்டுமானாலும் துண்டாகும் நிலையில் உள்ளது. இதனால் எப்போது விழுமோ எனத் தெரியாத நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மக்கள் நலன் கருதி, உடனடியாக சம்மந்தப்பட்ட மின்வாரியம் பழுதடைந்த சிமென்ட் மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.