விழுப்புரம் மாவட்ட வாக்குசாவடி மையங்களில் மேலிட பார்வையாளர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 6ம் தேதி நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குசாவடி மையத்தை மேலிட பார்வையாளர் நேரில் ஆய்வு செய்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 6 ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் ஆகியோர் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அப்போது அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.