விக்கிரவாண்டி பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவியேற்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சியில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்;
விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள்
விக்கிரவாண்டிபேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடந்தது. விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு எம்.எல்.ஏ., புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தேர்தல் பார்வையாளர் ரமணன், கல்விக்குழு பாபு ஜீவானந்தம், ரவிதுரை , முன்னாள் சேர்மன் மலர் மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
பேரூராட்சி செயல் அலுவலர் ,தேர்தல் அலுவலர் அண்ணாதுரை வெற்றி பெற்ற 15 வார்டு கவுன்சிலர்களான கனகா சக்திவேல், சுரேஷ், ரமேஷ், சர்க்கார் பாபு, ரேவதி வீராசாமி, புஷ்பராஜ். ஆனந்தி, பாலாஜி, வீரவேல், சுதா பாக்கியராஜ், அப்துல் சலாம், பிரியா பூபாலன், பவானி ராஜேஷ், சுபா சிவஞானம், வெண்ணிலா காத்தவராயன் ஆகியோருக்கு கவுன்சிலராக பதவி பிரமாண உறுதிமொழி வாசித்து பதவியில் அமர்த்தினார் .
உதவி தேர்தல் அலுவலர்கள் இருதயராஜ், வெங்கடேசன், இளநிலை உதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் , நகர தி.மு.க., செயலாளர் நைனா முகமது உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .