விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சியில் ஆட்சியர் மோகன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
ரூ.4 கோடியே 10லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியையும், 15 வது மான்ய நிதிக்குழு திட்டத்தில் ரூ. 20லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வரும் புதுக்குளம் சீரமைப்பு பணி, கால்நடை மருத்துவ மனை வளாகம் மற்றும் ரூபாய் 7.75 லட்சம் மதிப்பில் கக்கன் நகரில் புதிதாக கட்டப்டும் பொது கழிவறை கட்டடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
வேளாண்மை இணை இயக்குனர் ரமணன்,உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் , வட்டாட்சியர் இளவரசன், செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலைஉதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.