உயரம் குறைவான மாணவிக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் உயர வளர்ச்சி குறைந்த மாணவிக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கவேண்டும் என கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி இல்லாமல் மூன்று அடி உயரமுள்ள மாணவிக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் இராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில்.
விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒண்றியம், காணை ஊராட்சியை சேர்ந்த வயலாமூர் குக்கிராமத்தில் உயரம்தடைபட்ட, மாற்றுத் திறனாளி ரஞ்சினி என்பவருக்கு 15 வயது ஆகிறது. இதுவரை இவர் சுமார் மூன்று அடி உயரத்திற்கு மேல் வளர்ச்சி இல்லை, வளர்ச்சி தடைப்பட்டோருக்கான மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவர் சான்று வழங்க கோரி கடந்த இரண்டாண்டுகளாக மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை வழங்க நடைபெறும் முகாம்கள், முண்டியம் பாக்கம் மாவட்ட மருத்துவ மனை ஆகிய இடங்களுக்கு சென்று முயற்சித்தும் இதுநாள் வரை மருத்துவ சான்று வழங்கப்படவில்லை,
இவர் தற்போது 9ஆம் வகுப்பில் படித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு வழங்கும் கல்வி உதவி தொகை பெறவும் ,மற்றும் இட ஒதுக்கீடு சலுகைகளை பெறவும் இயலாத நிலை உள்ளது.அதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக கோரிக்கை மனு மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை வேண்டும் என தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.