அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்

Update: 2021-07-29 14:57 GMT

விக்கிரவாண்டியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்தறனாளிகளுக்கு ஏஏஒய் குடும்ப அட்டை வழங்ககோரி போராட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஏஒய் குடும்ப அட்டை வழங்க வேண்டி கோரிக்கை மனு போராட்டம் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது,

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார், போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் கோரிக்கை அடங்கிய மனுக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

Tags:    

Similar News