பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி

விக்கிரவாண்டி தொகுதியில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.;

Update: 2021-10-30 13:00 GMT

கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சைக்கிள் பேரணி

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.  வட்ட செயலாளர் பி பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்

இந்த சைக்கிள் பேரணி பனையபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தொடங்கி பனையபுரம் கடைத்தெரு வழியாக விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் ஆர்.கலியமூர்த்தி, உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி  பேரணியில் சென்றனர்

Tags:    

Similar News